என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மாணவர் சங்கம்
நீங்கள் தேடியது "மாணவர் சங்கம்"
கோவை அருகே சுரங்கப்பாதை கேட்டு பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை:
கோவை இருகூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்த பள்ளி ஊருக்கு தெற்கே ரெயில்வே பாதையை தாண்டி அமைந்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வர தினமும் ரெயில்பாதையை கடந்து வர வேண்டி உள்ளது. எனவே ரெயில்பாதையை கடந்து செல்ல சுரங்கபாதை அமைக்க வேண்டும் என பல முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
நேற்று மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவஇடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.
இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி சிங்காநல்லூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணன், தினேஷ், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மாரியப்பன், ரவிந்திரன், பாலகிருஷ்ணன், குருசாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஸ்டாலின், பிரபாகரன், காவ்யா மற்றும் சிலர் சட்டவிரோதமாக கூடி, மாணவ, மாணவிகளை திரட்டி பள்ளி கதவை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அதன்பேரில் கோகுல் கிருஷ்ணன் உள்பட 9 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், மாணவர்களை தடுத்தல், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஐக்கிய இடதுசாரி கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்று முக்கிய பொறுப்புக்களை கைப்பற்றியுள்ளனர். #JNUSUElection2018
புதுடெல்லி:
தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 14-ம் தேதி காலை துவங்கியது. இந்த தேர்தலில் போட்டியிட்ட அகில பாரதிய வித்யா பரிஷத் (ஏ.பி.வி.பி.) என்ற மாணவர் சங்கத்துக்கு வாக்கு எண்ணிக்கை குறித்து தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.பி.வி.பி. சங்க மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது, எதிர்ப்பாராதவிதமாக வாக்கு எண்ணும் அறைக்குள் நுழைந்த ஏ.பி.வி.பி. சங்க மாணவர்கள் வாக்குப்பெட்டிகளை உடைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பல்கலைக்கழக தேர்தல் நிர்வாகம் அறிவித்தது.
பின்னர், நேற்றிரவு மீண்டும் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் இன்று பிற்பகல் வெளியான முடிவு நிலவரங்களின்படி, ஐக்கிய இடதுசாரி கூட்டணியை சேர்ந்த சாய் பாலாஜி தலைவராகவும் , சரிகா சவுத்ரி துணை தலைவராகவும், ஐஜாஸ் அஹமத் ராத்தெர் பொதுச் செயலாளராகவும், அமுதா ஜெயதீப் துணை பொதுச் செயலாளராகவும் தேர்வாகியுள்ளனர்.
அனைத்திந்திய மாணவர் சங்கம், இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு, அனைத்திந்திய மாணவர்கள் கூட்டமைப்பு, டெல்லி மாணவர்கள் கூட்டமைப்பு ஆகிய சங்கங்கள் இந்த ஐக்கிய இடதுசாரி கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
#JNUSUElection2018
×

X